கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 155 இடங்களில் சிறப்பு முகாம்

கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் வகையில் மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்
சிறப்பு முகாம்
Published on

மதுரை:

மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 142 வரையறுக்கப்பட்ட குடிசை பகுதிகள், 189 வரையறுக்கப்படாத குடிசை பகுதிகள் என சுமார் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் இலவசமாக வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் சூரணப் பொடி அனைத்து வார்டு பகுதிகளிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் வகையில் மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் 155 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் வீடு வீடாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஓமியோபதி மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு மேலும் பொதுமக்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வழங்கப்படும் மாத்திரைகளை முறையாக உட்கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com