

சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது51). இவரது தம்பி பச்சைராஜ். இவரது மனைவி கணபதியம்மாளிடம் அதே ஊரை சேர்ந்த சரவண பெருமாள் (33) என்பவர் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை பச்சைராஜ் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சரவண பெருமாள் சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டிற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சரவண பெருமாள், காளியம்மாளை அடித்து உதைத்துள்ளார்.
இதுகுறித்து காளியம்மாள் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணபெருமாளை கைது செய்தனர்.