

பாடகர் எஸ்.பி.பி. பிரபலமான பாடகராக மாறிய பின்பும், எளிமையுடன் வாழ்ந்தார். பிறரை நேசிக்கும் குணம் கொண்டவர்.
உடன் பாடும் பாடகருக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர். இதனால் சக கலைஞர்கள் மத்தியில் அதிசயத்துடன் பார்க்கப்பட்டார்.
கேரளாவின் பிரபல பாடகர் ஏசுதாஸ் இவரை தனது உடன்பிறவா சகோதரர் என்று கூறியுள்ளார். மேடை நிகழ்ச்சிகளிலும் எஸ்.பி.பி. தன்னோடு சேர்ந்து பாடும் இளைய பாடகர்களுக்கு மதிப்பு கொடுத்து பாட வைப்பார்.