பயணிகள் அடிக்கடி சங்கிலியை இழுப்பதால் ரெயில்கள் தாமதம் - தென்னக ரெயில்வே

பயணிகள் அடிக்கடி சங்கிலியை பிடித்து இழுத்து ரெயில்களை நிறுத்துவதுதான் பெரும்பாலான ரெயில்கள் காலதாமதத்துக்கு காரணம் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் அடிக்கடி சங்கிலியை இழுப்பதால் ரெயில்கள் தாமதம் - தென்னக ரெயில்வே
Published on

தென்னக ரெயில்வேயில் தினமும் சராசரியாக 1300 விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இது தவிர புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் நாளொன்றுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

விரைவு ரெயில்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. பெரும்பாலான ரெயில்கள் காலதாமதத்துக்கு காரணம் பயணிகள் அடிக்கடி சங்கிலியை பிடித்து இழுத்து ரெயில்களை நிறுத்துவதுதான் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் விரைவு ரெயில்கள் கால தாமதத்துக்கு பயணிகள் சங்கிலியை அடிக்கடி இழுப்பதே முக்கிய காரணம். சக பயணிகள் ஏற முடியாதது. ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்கும்போது உணவு பொருட்கள் வாங்க சென்றுவிட்டு ரெயிலை தவறவிடுதல், பெட்டிகளில் தண்ணீர் இல்லை, மின்விசிறி, மின்விளக்கு எரியவில்லை போன்ற சின்ன சின்ன காரணங்களுக்காக சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com