புறநகர் ரெயில் சேவை இயக்கம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை - தெற்கு ரெயில்வே

புறநகர் ரெயில் சேவை இயக்கம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே
தெற்கு ரெயில்வே
Published on

சென்னை:

தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு வரும் 7-ம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 7-ம் தேதி முதல் சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையில் நாளை மறுநாள் முதல் புறநகர் ரெயில் சேவை இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், புறநகர் ரெயில் சேவை இயக்கம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

மேலும், செப்டம்பர் 7-ம் தேதி முதல் புறநகர் ரெயில்களை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அட்டவணை ஏதும் வெளியிடவில்லை என்றும் தெற்கு ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com