

சென்னை:
சென்னை அருகே காட்டாங்கொளத்தூர்- சிங்கப்பெருமாள் கோவில் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களும் அக்டோபர் 20ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டில் இருந்து காட்டாங்கொளத்துர், கூடுவாஞ்சேரி செல்லும் செல்லும் குறிப்பிட்ட சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், காட்டாங்கொளத்தூர், கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.