தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்
Published on

சென்னை:

கன்னியாகுமரி அருகே மேல் அடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கோடை மழை பெய்துவருகிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றும் தமிழகத்தின் வழியாக செல்கிறது. இந்த இரு காரணங்களால் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பெய்வது கோடை மழையாகும்.

இவ்வாறு வானிலை அதிகாரி தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சிவகங்கை 8 செ.மீ., பேச்சிப்பாறை 5 செ.மீ., திருப்பூர், கீரனூர், பெரியாறு தலா 4 செ.மீ., தாராபுரம், திண்டுக்கல், தாளவாடி, போடிநாயக்கனூர் தலா 3 செ.மீ., அம்பாசமுத்திரம், பீளமேடு, வால்பாறை, கழுகுமலை, வத்திராயிருப்பு, மாரண்டஹள்ளி, கூடலூர், கொடைக்கானல், நடுவட்டம் தலா 2 செ.மீ., தளி, குழித்துறை, சேரன்மகாதேவி, குளச்சல், கூடலூர் பஜார், சிவகிரி, பூதப்பாண்டி, தேன்கனிக்கோட்டை, கமுதி, தேவலா, நாமக்கல், பரமத்திவேலூர், அன்னூர், சின்னக்கள்ளார், பேரையூர், சேந்தமங்கலம், விளாத்திக்குளம் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com