மூன் ஜே இன்
மூன் ஜே இன்

தென்கொரிய அதிபர் செல்வாக்கு சரிவு: கருத்துக்கணிப்பில் அம்பலம்

அதிபர் மூன் ஜே இன் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அவரது செல்வாக்கு 4.6 சதவீத புள்ளிகள் குறைந்து 44.1 சதவீதமாகி உள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன் ஜே இன் செல்வாக்கு இந்த அளவுக்கு சரிந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
Published on

சியோல் :

தென்கொரியாவின் அதிபராக மூன் ஜே இன் பதவியில் உள்ளார். அவரது தாராளவாத கட்சியை சேர்ந்த சியோல் நகர மேயர் பார்க் வான் சூன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்கள் அதிபர் மூன் ஜே இன் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 1,510 பேர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர்.

இதில் அவரது செல்வாக்கு 4.6 சதவீத புள்ளிகள் குறைந்து 44.1 சதவீதமாகி உள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன் ஜே இன் செல்வாக்கு இந்த அளவுக்கு சரிந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

சியோல் மேயர் மர்மச்சாவு, ரியல் எஸ்டேட் சந்தையில் மூன் ஜே இன் கொண்டுவந்துள்ள கொள்கை மாற்றங்களைத் தொடர்ந்து அவரது செல்வாக்கு சரிந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com