

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தொடர்களை வென்ற இந்திய அணி, முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது.
இந்திய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. தற்போதைய அணி தென்ஆப்பிரிக்கா மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்க தொடர் இந்திய வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்க தொடர் இந்திய வீரர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற நிலைத்தன்மை முக்கியமானது. இந்தய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறும். தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை’’ என்றார்.