சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். சுரங்க பாதை பணி நிறைவு: விரைவில் ரெயில் சோதனை ஓட்டம்

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வழித்தட சுரங்க பாதையில் இம்மாதம் இறுதிக்குள் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். சுரங்க பாதை பணி நிறைவு: விரைவில் ரெயில் சோதனை ஓட்டம்
Published on

சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பயணிகளின் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

கோயம்பேடு - ஆலந்தூர் வரையிலும், சின்னமலை - விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. திருமங்கலம் - நேரு பூங்கா வரையில் 8 கி.மீட்டர் சுரங்க வழித்தடத்தில் மே மாதம் பயணிகள் சேவை தொடங்கப்பட்டது.

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக இரவு பகலாக நடைபெற்றன. தற்போது இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஏ.ஜி. டி.எம்.எஸ். ஆகிய 4 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் இறுதிக்குள் இந்த வழித் தடத்தில் சுரங்க ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடை பெறுகின்றன.

தற்போது இந்த வழித்தடத்தில் மின் பாதை, சிக்னல் அமைக்கும் பணிகள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் நவீன முறையில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சைதாப்பேட்டை - தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான சுரங்க பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த மாதத்திற்குள் இந்த வழித்தட பாதையில் சோதனை ரெயில் ஓட்டம் நிகழ்ச்சி நடத்தி ஆய்வு செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து விரைவில் இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்படும்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அண்ணா சாலை எல்.ஐ.சி. - சென்ட்ரல் வரையிலான பணிகள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com