முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் மன்மோகன் சிங், சோனியா அஞ்சலி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
Published on

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், நாட்டின் முதல் பெண் பிரதமருமான இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில் பிரதமர் மோடியும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில், அவருக்கு எனது தாழ்மையான அஞ்சலியை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல டெல்லியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தாலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையிலும் அவர்கள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com