மல்லூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகன் குத்திக்கொலை- தந்தை வெறிச்செயல்

மல்லூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
கொலை
கொலை
Published on

பனமரத்துப்பட்டி:

மல்லூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவரது மகன் ஜெகன் (23). வெள்ளிப்பட்டறை கூலித்தொழிலாளி.

ஜெகனுக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி காலை ஜெகன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

இதனால் தந்தை-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர், தனது மகன் என்றும் பாராமல் ஜெகனை அங்கிருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜெகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெகன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com