குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்

குடிக்க பணம் கொடுக்காததால் தந்தையை மகனே குத்தி கொன்ற சம்பவம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன்
Published on

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலை ராயப்பபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (58). தங்க நகை தொழிலாளி. இவரது மகன் தீப்ஸ் வரூப் (27). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்து வந்துள்ளார்.

மேலும் குடிப்பழக்கமும் இருந்து வந்தது. தனது தந்தை செல்வராஜிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு தீப்ஸ் வரூப் தந்தையிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

ஆனால் செல்வராஜ் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தீப்ஸ் வரூப் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது தந்தையின் வயிறு, மார்பு, முதுகில் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை இறந்ததை பார்த்ததும் தீப்ஸ் வரூப் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இக்கொலை குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய தீப்ஸ் வரூப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையை மகனே குத்தி கொன்ற சம்பவம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com