நிலக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

நிலக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டை அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தி, மகன் கேசவன். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அன்று முதல் கேசவன் (வயது 21) மன உளைச்சலில் இருந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

தந்தையின் மரணம் கேசவனை வெகுவாக பாதித்தது. அவர் இல்லாத உலகில் தானும் வாழ விருப்பம் இல்லை. எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

சம்பவத்தன்று மாமா வீட்டுக்கு செல்வதாக தாயிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற கேசவன் கயிறால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து விளாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செயது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com