கம்பைநல்லூர் அருகே மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு

கம்பைநல்லூர் அருகே வேலைக்கு செல்லுமாறு கூறிய தந்தையை ஆத்திரத்துடன் கீழே தள்ளியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்பைநல்லூர் அருகே மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த பெரமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). விவசாயியான இவரது மகன் ஆறுமுகம் (22). இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை பெரியசாமி மகனை கண்டித்தார். இதனால் பெரியசாமிக்கும் ஆறுமுகத்துக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது தந்தை பெரியசாமியை பிடித்து தள்ளினார். இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த பெரியசாமியை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுமுகம் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com