சாக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து முதியவர் கொலை- மகன் வெறிச்செயல்

சாக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை சாக்கவயலை சேர்ந்தவர் சேவுகன் (வயது80). இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக மகன் வீராசாமி வீட்டில் இருந்தார்.

வீராசாமியின் மனைவி மங்கலம் மற்றும் குழந்தைகள் நேற்று வெளியூர் சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர். அப்போது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சேவுகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சேவுகனை அவரது மகன் வீராசாமிதான் கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம்? என போலீசார் சந்தேகப்பட்டனர். இதனை தொடர்ந்து . தலைமறைவாக உள்ள அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் மறைந்திருந்த வீராசாமியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தந்தையை கவனிக்க ஆள் இல்லாமல் இருந்ததால் குடிபோதையில் சேவுகன் கழுத்தை அறுத்து வீராசாமி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com