சிறையில் என்னை கொல்ல முயற்சி நடக்கிறது - சி.பி.ஐ கோர்ட்டில் கதறிய இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, சிறையில் தன்னை கொல்ல சதி நடப்பதாக சி.பி.ஐ கோர்ட்டில் தெரிவித்துள்ளார். #IndraniMukerjea
சிறையில் என்னை கொல்ல முயற்சி நடக்கிறது - சி.பி.ஐ கோர்ட்டில் கதறிய இந்திராணி முகர்ஜி
Published on

மும்பை:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிகளவு சக்தி கொண்ட வலி நிவாரண மருந்துகளை அவர் உட்கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில நாட்கள் சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், சி.பி.ஐ கோர்ட்டில் இன்று அவர் தனது வாதத்தினை பதிவு செய்துள்ளார்.

அதில், “சிறையில் என்னை கொல்வதற்காக யாரோ முயன்று வருகின்றனர். என்னுடைய வாழ்க்கையை நினைத்து பயமாக உள்ளது. சிறைத்துறை ஐ.ஜி.யிடம் நான் எந்த வாக்குமூலமும் அளிக்கவில்லை. வழக்கு தொடர்பாக நான் யாரிடமும் பேச வில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndraniMukerjea 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com