அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 கென்ய வீரர்கள் பலி

சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள டோப்லி நகரில் அல் ஷபாப் பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கென்ய படைவீரர்கள் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 கென்ய வீரர்கள் பலி
Published on

நைரோபி:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள், இங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும், வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின்மீது தாக்குதல் நடத்தி, பலரை சுட்டுக் கொன்றும், சிலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டோப்லி நகரில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கென்ய படைவீரர்கள் 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர் என கென்ய அரசு தெரிவித்துள்ளது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com