சோமாலியாவில் வெட்டுக்கிளிகளால் பேரழிவு - அவசர நிலை பிரகடனம்

ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதன் காரணமாக தேசிய அவசர கால நிலையை அந்நாட்டு அரசு பிரகடனப்படுத்தி உள்ளது.
அச்சுறுத்தலாக உள்ள வெட்டுக்கிளி
அச்சுறுத்தலாக உள்ள வெட்டுக்கிளி
Published on

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ என்ற படத்தில் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழிக்க பெருநிறுவனம் ஒன்று வெட்டுக்கிளிகளை ஏவி விடும். அண்மையில் குஜராத் மாநிலத்தில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து விவசாய நிலத்தை அளித்தன. அப்போது அந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானால் அனுப்பப்பட்டவை என குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சோமாலியாவில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன. இவை விவசாய பயிர்களை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டின் ஜூபா நதியின் படுகையில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் பயிர்களுக்கு இந்த வெட்டுக்கிளிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com