சோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பாராளுமன்றம் அருகே இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
சோமாலியா பாராளுமன்றம் அருகே கார் குண்டு தாக்குதலில் 12 பேர் பலி
Published on

மொகடிஷு:

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள பாராளுமன்றம் அருகே ஒரு பிரதான சாலையில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். உயிரிழந்த 12 பேரும் அருகாமையில் உள்ள கென்யா நாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்த சுமார் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com