காஷ்மீர்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலம் கண்டெடுப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் நேற்று கடத்தப்பட்ட ராணுவ வீரர் சோபியான் மாவட்டத்தில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலம் கண்டெடுப்பு
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், சசூன் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் இர்பான் அஹமது கான் என்பவர் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் இன்று காலை சோபியான் மாவட்டத்தில் அவரது பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இர்பான் அஹமது கானை கடத்திக் கொன்ற தீவிரவாதிகளை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com