ஜம்மு-காஷ்மீர்: குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர்: குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் பலி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு படையினர் கூறுகையில், கேரன் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com