ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பன்டிப்போராவில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் தனது இன்னுயிரை இழந்தார். #Bandiporaencounter
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் ராணுவ வீரர் வீரமரணம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஷிவகுமார் தனது இன்னுயிரை இழந்து வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Bandiporaencounter

X

Maalai Malar
www.maalaimalar.com