காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை

காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு ராணுவ வீரர் தற்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் பட்டான் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில் இருந்த பாட்டினி திரிபாதிராவ் என்ற ராணுவ வீரர் நேற்று காலை திடீரென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது பாட்டினி திரிபாதி ராவ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com