அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை
செய்திகள்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு இதுவரை 1,705 ஏக்கர் கரும்பு பதிவு
நடப்பு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடந்தது.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் கரும்பு முன்பதிவு நடப்பது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு முன்பதிவு செய்யப்பட்ட கரும்பை அடிப்படையாக கொண்டு நடப்பு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி கரும்பு அரவை தொடங்கி ஜூலை 1-ந் தேதி வரை நடந்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு (2022) அரவைக்காக தற்போது கரும்பு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை 810 ஏக்கர் கன்னி கரும்பும், 895 ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தம் 1,705 ஏக்கர் பரப்புள்ள கரும்பு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

