நிலக்கோட்டையில் கம்ப்யூட்டர் மையத்தில் நல்ல பாம்பு புகுந்தது

நிலக்கோட்டை அன்பு தியேட்டர் அருகே உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் நல்ல பாம்பு புகுந்தது. அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நிலக்கோட்டையில் பிடிபட்ட நல்ல பாம்பை படத்தில் காணலாம்.
நிலக்கோட்டையில் பிடிபட்ட நல்ல பாம்பை படத்தில் காணலாம்.
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அன்பு தியேட்டர் அருகே உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்தில் ஒரு நல்ல பாம்பு திடீரென புகுந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பாம்பை கண்டவுடன் அலறியடித்து கம்ப்யூட்டர் மையத்திற்கு வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் சீனிவாசன் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கம்ப்யூட்டர் மையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பை தேடி பிடித்தனர்.

இந்த பாம்பை பிடித்து தீயணைப்பு வீரர்களில் ஒருவர் கடுமையான விஷம் கொண்ட பாம்பு என்றும் இது போன்ற பாம்புகள் காடுகளில் தான் காணப்படும் என தெரிவித்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com