கோபி அருகே பாம்பு கடித்து பெண் பலி

கோபி அருகே தோட்டத்தில் கட்டு அறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாம்பு
பாம்பு
Published on

கோபி:

கோபி அடுத்த முத்துக் காளிமடை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 48). இவர் கடந்த 5-ந் தேதி தனது தோட்டத்தில் கட்டு அறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக அவரை கடித்து விட்டது.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com