திங்களூர் அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு

திங்களூர் அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

ஈரோடு:

பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே உள்ள சாஸ்திரி தோட்டம் பெரியவீரசங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72). தனது மகனுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று பொன்னுசாமி மாட்டுத் தொழுவத்தில் உள்ள மாடுகளை அவிழ்த்து கட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று எதிர்பாராவிதமாக பொன்னுசாமியை கடித்து விட்டது.

இதுகுறித்து அவர் தனது மகனிடம் தெரிவித்தார்.

உடனே பொன்னுச்சாமியை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com