தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

சென்னை விமானத்தில் 3½ கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 3½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கம் கடத்தி வந்த 6 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Published on

ஆலந்தூர்:

சென்னை விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், நேற்று இலங்கையில் இருந்து சென்னை வந்த அனைத்து விமானங்களையும் சோதனையிட்டனர். பயணிகளையும், அவர்களது உடமைகளையும் பரிசோதித்தனர்.

இந்த நிலையில், நேற்று கொழும்பில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கா ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடந்தது. அப்போது அதில் இருந்த 6 பயணிகள் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த முகமது விஷான், அல்தாப், முகமது ரிமாஸ், முகமது ரப்பி, முகமது லாகி, பெண் பயணி சம்சுலா மவுலானா ஆகிய 6 பேரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடலில் மறைத்துகொண்டு வந்த 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய். தங்கம் கடத்தி வந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com