

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 338 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் அதிகபட்சமாக 9 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அகிலா தனஞ்ஜெயா (5 விக்கெட்), தில்ருவான் பெரேரா (4) ஆகியோரின் சுழலில் சிக்கி தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது.
214 ரன்கள் முன்னிலைப் பெற்றாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் இலங்கை தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் அசைரதம் அடித்த தொடக்க வீரர்களான குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் அடித்தனர்.
குணதிலகா 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி சில்வா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 18 ரன்னில் வெளியேறினார்.
குணதிலகா
4-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் 2-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.