5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

மேத்யூஸ், டிக்வெல்லா, குசால் மெண்டிஸ் ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #SLvSA
5-வது ஒருநாள் கிரிக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 300 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை
Published on

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குசால் பெரேரா 8 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் தொடக்க வீரர் டிக்வெல்லா சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். குசால் மெண்டிஸ் 38 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் மேத்யூஸ் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com