நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் நாளை பல்லேகெலேயில் தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களம் இறங்குகிறது. #SLvENG
நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்- வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதேபோல ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டத்திலும் அந்த அணியே வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டிடெஸ்ட் தொடரில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்டிலும் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பல்லேகெலேயில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இலங்கை அணி பதிலடி கொடுத்து சமன் செய்யும் வேட்கையில் உள்ளது. அந்த அணி கேப்டன் சன்டிமால் காயத்தால் இதில் ஆடவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com