ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ ராஜினாமா

ஸ்லோவேக்கியாவில் ஒரு செய்தியாளர் கொலையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Slovakia #PMresigns #RobertFico
ஸ்லோவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ ராஜினாமா
Published on

ஸ்லோவேக்கியா என்றழைக்கப்படும் ஸ்லோவேக் குடியரசு, நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடாகும். இதன் மேற்கு திசையில் செக் குடியரசும், ஆஸ்திரியாவும், வடக்கு திசையில் போலந்தும், கிழக்கு திசையில் உக்ரைனும், தெற்கு திசையில் ஹங்கேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஓர் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஆகும்.

ஸ்லோவேக்கியா நாட்டில் பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் ஒருவர் சமீபத்தில் தனது காதலியுடன் படுகொலை செய்யப்பட்டார். பிரதமரின் ஊழல் குறித்து செய்தி வெளியிட்டதாலேயே அந்த செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கோபமடைந்த மக்கள், பிரதமர் ராப்ர்ட் பிகோவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக நீடித்த போராட்டத்தால் பிரதமர் ராபர்ட் பிகோ, தனது பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com