சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Published on

சாத்தான்குளம்:

திசையன்விளை பாலகுமபர மண்டப தெருவை சேர்ந்தவர் வேம்படி மகராஜன் (வயது 44). இவர் அங்குள்ள ஒரு காய்கறி கடையில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி காய்கறிகளை கொள்முதல் செய்வதற்காக சாத்தான்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அடைப்புவிளை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று வேம்படி மகராஜனுக்கு மீண்டும் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு வேம்படி மகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com