மரக்காணம் அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் பலி

மரக்காணம் அருகே படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மரக்காணம் அருகே படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் பலி
Published on

மரக்காணம்:

மரக்காணம் தாலுகா எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர் வேலு (வயது 50). மீனவர். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், பிரசாத், பாபு ஆகியோரும் படகில் மீன் பிடிக்க எக்கியார்குப்பம் கடலுக்கு சென்றனர். அப்போது கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது.

வேலு, எதிர்பாராதவிதமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். உடனே அவரை பாபு உள்ளிட்ட 3 பேரும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே வேலு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com