ஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் இரு மாகாணங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 16 போலீசார் பலியாகினர். #AfghanTalibans
ஆப்கானிஸ்தான் - தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 போலீசார் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதிகளில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் பக்லான் மாகாணத்துக்குட்பட்ட ஹுசைன்ஹில் மாவட்டத்தில் காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச்சாவடி மீது நேற்றிரவு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 போலீசார் உயிரிழந்தனர்.

இதேபோல், தக்கார் மாகாணத்தில் உள்ள பசார் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். #AfghanTalibans

X

Maalai Malar
www.maalaimalar.com