ஜார்கண்ட்: குறைப்பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் பிறந்த உடனே அடுத்தடுத்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட்: குறைப்பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் அடுத்தடுத்து பலி
Published on

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள மெடினிநகர் நர்சிங் கோமில் சரிதா தேவி என்ற கர்ப்பிணி பெண் நேற்று அனுமதிக்கப்பட்டார். கார்க்வா கிராமத்தைச் சேர்ந்த இவர் கருவுற்று ஜந்து மாதம் மட்டுமே ஆன நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவருக்கு 3 ஆண் மற்றும் 3 பெண் என 6 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தது. ஆனால், முழுமையாக வளர்ச்சியடையாத இந்த குழந்தைகள் பிறந்த உடனேயே உயிரிழந்தன. ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்ததால் சரிதாவின் உடல் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சரிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குறைபிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com