ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை - மின்னல் தாக்கி 6 பேர் பலி

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #andhrapradesh #heavyrain
ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழை - மின்னல் தாக்கி 6 பேர் பலி
Published on

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், விசயநகரம், விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி பகுதிகளில் இடி ,மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில், இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 வயது சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விசயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 54 வயது பெண் மற்றும் அவரது 9 வயது பேத்தி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com