அசாம்: கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அசாம்: கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலம் கோல்பாராவிலிருந்து கவுகாத்திக்கு டிரைவர் உட்பட 6 பேர் காரில் சென்றுச் கொண்ருந்தனர். காரானது ஜாலுக்பாரி பகுதிக்கு அருகில் செல்லும் போது  டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். வேகமாக சென்றதால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com