

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள உதாம்பூர் நகரிலிருந்து ராம் நகர் நோக்கி இன்று மினி பஸ் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 1.30 மணியளவில் கரோவா என்ற இடத்தை நெருங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் பக்கவாட்டில் உள்ள சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்தது.
இவ்விபத்து பற்றிய தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் 17 பேரை உயிருடன் மீட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பிரேதங்களையும் வெளியே எடுத்தனர். காயமடைந்திருந்த அனைவரும் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் 15 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #tamilnews