உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் பலி - விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவு

உத்தரகாண்டில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக பலியாகினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இன்று மாலை ஒரு கும்பல் கள்ளச் சாராயம் குடித்துள்ளது. அதில் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் சம்பவ பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com