சிட்னி: கடல் விமான விபத்தில் 6 பேர் பலி

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இன்று கடல் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சிட்னி: கடல் விமான விபத்தில் 6 பேர் பலி
Published on

சிட்னி:

கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து உயரக்கிளம்பி, மீண்டும் நீர்நிலைகளில் தரை இறங்கும் விமானச் சேவைகள் சுற்றுலாவாசிகளை கவர்ந்து வருகின்றது.

இவ்வகையில், ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து இன்று 6 பேருடன் சென்ற ஒற்றை என்ஜின் கொண்ட கடல் விமானம், சிட்னி நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் சவுத் வேல்ஸ் மாநிலம் உள்ள கோவன் நகரின் அருகே ஹாக்கெஸ்பரி ஆற்றில் விழுந்தது. அந்த விமானத்தில் சென்ற ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இன்று பிற்பகல் நிலவரப்படி மூன்று பிரேதங்கள் மீட்கப்பட்டதாக அந்நாட்டு மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். தேனிலவு கொண்டாட சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்ற காம்பிரிட்ஜ் இளவரசியின் சகோதரி பிப்பா மிடில்டன் தம்பதியர் சிட்னி நகரில் கடல் விமானத்தில் பயணித்த புகைப்படங்கள் வெளியானது, நினைவிருக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com