சிவகாசி அருகே மது விற்ற 5 பேர் கைது

சிவகாசி அருகே மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

சிவகாசி:

சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி மது விற்ற இசக்கிகுட்டி (வயது22), காசி (56), கடற்கரை (41), முத்துராஜ் (39), குமரவேல் (34) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 54 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com