சிவகாசியில் நாளை பட்டாசு ஆலை அதிபர்கள் உண்ணாவிரதம்

பட்டாசு ஆலை உரிமையாளர்கள், அலுவலர்கள் நாளை (புதன் கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
சிவகாசியில் நாளை பட்டாசு ஆலை அதிபர்கள் உண்ணாவிரதம்
Published on

விருதுநகர்:

பட்டாசு தொழிலுக்கு சுற்றுப்புற சூழல் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளை மூடி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களது போராட்டத்துக்கு பட்டாசு தொழிலைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல தரப்பினரும் பட்டாசு ஆலைக்கு ஆதரவாக ஒருநாள் கடையடைப்பு நடத்தினர். இருப்பினும் பட்டாசு பிரச்சினைக்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நாளை (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

சிவகாசி திருத்தங்கல் சாலையில் உள்ள குறுக்குப்பாதை அருகே இந்த போராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com