சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தனபாக்கியம். கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மிட்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com