சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி

சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டை-திருவண்ணாமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com