சிங்காநல்லூர் அருகே கல்குவாரியில் மூழ்கி மாணவர் பலி

சிங்காநல்லூர் அருகே கல்குவாரியில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர் அருகே கல்குவாரியில் மூழ்கி மாணவர் பலி
Published on

சூலூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மகேந்திரன் (16). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.மகேந்திரன் தனது நண்பர்களுடன் பட்டணம் அருகே உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றார். அப்போது மகேந்திரன் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து சூலூர் போலீசார் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மகேந்திரன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com