சிங்காநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை

சிங்காநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 59). கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (50). அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சங்கருக்கு வேலை சரியாக கிடைக்காததால் விரக்தியில் இருந்தார்.

சம்பவத்தன்று வழக்கம்போல் தனது மனைவியை வேலைக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். பின்னர் நண்பர்களுடன், பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com