கர்நாடக முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவுக்கு பாரத ரத்னா: சித்தராமையா பரிந்துரை

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவின் பெயரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக முதல் மந்திரி சித்தராமையா உறுதி அளித்துள்ளார்.
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவின் 115-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு விதான சவுதாவில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முன்னாள் முதல் மந்திரி நிஜலிங்கப்பாவின் சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, நிஜலிங்கப்பாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளேன்.

மேலும், நேர்மையான அரசியல்வாதிகளின் வரிசையில் இடம் பெறும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் நிஜலிங்கப்பாவின் சிலையை நிறுவவேண்டும் எனவும் பரிந்துரை செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com