கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் முதல் மந்திரி சித்தராமையா
பெங்களூரு:
கர்நாடகம் மாநிலத்தின் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான அரசு இன்று 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தது.
முதல் மந்திரியும், நிதி மந்திரியுமான சித்தராமையா காலை 11 மணிக்கு அமைச்சரவையை கூட்டினார். அப்போது காவிரி நீர் வழக்கில் கர்நாடகாவுக்கு ஆதரவான தீர்ப்பு கிடைத்ததற்கு முதல் மந்திரி சித்தராமையாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பின்னர் காலை 11.30 மணிக்கு 14-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை வருவதால் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுதொடர்பாக சித்தராமையா கூறுகையில், இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று வெளியான நிலையில், கர்நாடக மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #karnataka #budget #siddharamaiah #tamilnews

